Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது செருப்பு வீச்சு: ஒருவர் கைது!

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது செருப்பு வீசிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் காற்று மாசடைந்து உள்ளதையடுத்து, அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால், ஒற்றைப்படை, இரட்டைப்படை பதிவெண் வாகன கட்டுப்பாடு முறையை கொண்டு வந்தார். இதன் மூலம் காற்றில் ஏற்பட்டிருந்த மாசு குறைந்திருந்தது.

இந்த திட்டத்தை மீண்டும் வரும் 15-ம் தேதி முதல் அமல்படுத்த கெஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அப்போது அங்கு இருந்த நபர் ஒருவர் திடீரென எழுந்து தனது செருப்பை கழற்றி கெஜ்ரிவாலை நோக்கி வீசினால். ஆனால், அது அவர் மீது படவில்லை.

இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பிரிந்து தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி சேனா அமைப்பினர் உறுப்பினர் பிரகாஷ் என்பது தெரியவந்தது. மேலும், சி.என்.ஜி ஸ்டிக்கர் வழங்குவதில் முறைகேடுகள் நடந்ததாக தான் அளித்த புகார் மீது கெஜ்ரிவால் நடவடிக்கை எடுக்காததால் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ