Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2008 மும்பை தாக்குதல் சம்பவம்: முக்கிய தீவிரவாதி கைது!

ஆஸ்திரியா; மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி முகமது கனி உஸ்மான் நேற்று ஆஸ்திரியாவில் பிடிபட்டான்.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் கடல் வழியாக மும்பைக்குள் கடந்த 2008-ம் ஆண்டு,  நவம்பரில்  ஊடுரு வினர். இவர்கள் மும்பையின் பிரபல தாஜ் ஓட்டல் உட்பட பல்வேறு இடங்களில் தாக்குதலை நிகழ்த்தி,  இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் 166 பேரை கொன்று குவித்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம்,  உலகை அதிரச் செய்தது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் அளவு பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தினை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவில் இன்னும் சிக்கல் எழுந்தது.

இத்தீவிரவாதிகளில் 9 பேர்,  பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி மட்டும் பிடிபட்டான். விசாரணையின் முடிவில் பின்னர்  தூக்கிலிடப்பட்டான். தீவிரவாதிகளுக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் முதலில் மறுத்தது. பின்னர் அஜ்மல் கசாப் மற்றும் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்தான் என ஒப்புக்கொண்டது.

என்றாலும் இத்தாக்குதலில் தொடர்புடையவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் மறுத்து விட்டது. தங்கள் நாட்டிலேயே விசாரணை நடத்தி தண்டிப்பதாக கூறி வந்ததோடு,  போதிய ஆதாரங்கள் இல்லை என்று இந்த வழக்கை முடக்கும் வகையில் செயல்பட்டுவருகிறது.

இதனிடையே  இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் முக்கிய தீவிரவாதி முகமது கனி உஸ்மானை, நேற்று ஆஸ்திரியாவில் போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட தீவிரவாதி உஸ்மானிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது காவல்துறை.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close