Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேதர்நாத் வெள்ளத்திற்கு இதுதான் காரணமாம்!

ஹரித்துவார்: கேதர்நாத் வெள்ளத்திற்கு தேனிலவு ஜோடிகளும், சுற்றுலாவாசிகளுமே காரணம் என்று துவாரகா சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி தெரிவித்து உள்ளார்.

ஹரித்வாரில் ஆன்மிக பயணம் மேற்கொண்டிருக்கும் துவாரகா சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி, கடந்த ஞாயிறன்று, மகாராஷ்டிராவில் உள்ள சனிபகவான் கோவிலில் பெண்கள் நுழைந்ததால் பாலியல் பலாத்காரங்கள் அதிகரிக்கும் என்று கூறியது  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த சர்ச்சை அடங்குவதற்குள் கேதர்நாத் வெள்ளத்திற்கு, தேனிலவு ஜோடிகளும், சுற்றுலாவாசிகளுமே காரணம் என்று மற்றொரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, ''உத்தரகாண்ட் மாநிலம், கடந்த 2013–ம் ஆண்டு வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிப்புக்குளானது. கனமழை மற்றும் பெருவெள்ளம், நிலச்சரிவில் சிக்கி கேதர்நாத் கோவிலுக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.

இந்த பேரழிவிற்கு காரணம், “நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து தெய்வபூமிக்கு (உத்தரகாண்ட்) மக்கள் கொண்டாட்டம், பிக்னிக் மற்றும் தேனிலவுக்கு வருவதே கேதர்நாத் பேரழிவுக்கு வழிவகை செய்தது. புனிதமில்லாத இதுபோன்ற நடவடிக்கையானது தொடர்ந்தால் மீண்டும் இதுபோன்ற பேரழிவு சம்பவங்கள் நேரிடும்” என்று தெரிவித்து உள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close