Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இடதுசாரி கூட்டணி அரசின் அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்ததே எனது சாதனை: மம்தா

கொல்கத்தா: 30 ஆண்டுகளாக இடதுசாரிக் கூட்டணி அரசு நடத்தி வந்த அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்ததே எனது அரசின் பெரிய சாதனை என்று கொல்கத்தாவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறினார்.

மேற்குவங்க மாநிலத்தில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (ஏப்.17) இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து அங்கு அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசும்போது, ''இடதுசாரிகள், காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தேர்தல் பிரசாரம் என்ற பெயரில் எனக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.

மேற்கு வங்கத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை எனது தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு செயல்படுத்தியுள்ளது. 30 ஆண்டுகளாக இடதுசாரிக் கூட்டணி அரசு நடத்தி வந்த அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்ததே எனது அரசின் பெரிய சாதனையாகும்.

என் மீது குற்றம்சாட்டுவது ஒன்றே அக்கட்சிகளின் கொள்கை என்பதைப் போல அவர்களின் செயல்பாடுகள் உள்ளன. ஆனால், அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்பதை மக்கள் அறிவார்கள். எனக்கு எதிர்க்கட்சிகள் நற்சான்றிதழ் தரத் தேவையில்லை. பொதுமக்கள் சான்றளித்தாலே போதுமானது" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close