Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்கா ஆதிக்கம் செலுத்த மோடி அரசு வரவேற்பு அளிக்கிறது: இ.கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

புதுடெல்லி: இந்தியாவில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்த, மோடி அரசு வரவேற்பு அளிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.

அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டர் சமீபத்தில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டார். அப்போது, இருநாடுகளிடைய ராணுவத் தளவாட பரிமாற்ற ஒப்பந்தம் மேற்கொள்ள கொள்கை அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு சர்ச்சையும், எதிர்ப்புக்களும் கிளம்பி உள்ளது.

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''அமெரிக்காவின் நெருக்குதலுக்கு மோடி அரசு அடிபணிந்துவிட்டது. உலகின் பல்வேறு நாடுகள் அமெரிக்காவின் ஆதிக்கம் தங்கள் நாட்டில் இருக்கக் கூடாது என்று போராடி வருகின்றனர். ஆனால், இந்திய அரசு அமெரிக்கா ஆதிக்கம் செலுத்த வரவேற்பு அளிக்கிறது. அமெரிக்கா நமது நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த வகை செய்யும் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது மிகவும் அபாயகரமானது.

இதுபோன்ற முக்கிய விஷயங்களை முதலில் நாடாளுமன்றத்தில் விவாதித்து மக்களின் கருத்தைக் கேட்டு மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும். ஆனால் அரசு அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. தேசத்தின் இறையாண்மையில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. தேசத்தின் மீது பற்றுள்ளவர்களும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களும் மத்திய அரசின் முடிவுக்கு தங்களுடைய கடும் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்" என்று கூறப்பட்டு உள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close