Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெட்ரோல், டீசல் விலை குறைவு!

புதுடெல்லி: பெட்ரோல் லிட்டருக்கு 74 பைசாவும், டீசல் லிட்டருக்கு ரூ.1.30-ம் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது,  பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

அதன்படி, பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தை விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 15 நாட்களுக்கு ஒருமுறை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.

அதன் அடிப்படையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்துள்ளன. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 74 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.30 குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு இன்று (15-ம் தேதி) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ