Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கன்ஹையா குமார் கொண்டாடப்பட வேண்டியவரா..? - கடுகடு நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட கன்ஹையா குமார் கொண்டாடப்படவேண்டியவரா என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசவிரோத குற்றச்சாட்டில் கைதாகி,  ஜாமீனில் வெளிவந்துள்ள ஜேஎன்யு மாணவர் பேரவைத் தலைவர் கன்ஹையா குமாருக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டி, நிர்மலா சீதாராமன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

டெல்லியில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், “இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலகட்டத்தில் நான் ஜேஎன்யுவில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது துணைவேந்தரை முற்றுகை இட்டதற்காக 67 மாணவர்கள் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதற்கு முந்தைய நாள் இரவில் 160 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஒரு மாணவரின் அறையை பூட்டியதற்காக,  முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கையை எடுத்தனர். இப்போது, தேசவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக ஜேஎன்யு மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் நாட்டின் நிலை மோசமாகவிட்டதாக காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவிக்கிறது. அப்படி என்றால் நமது நீதித்துறையின் செயல்பாடுகள் தவறு என்கிறதா காங்கிரஸ்?" என்று கேள்வி எழுப்பிய நிர்மலா சீதாராமன், “இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியதற்காக தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அஃப்சல் குரு நினைவாக ஜேஎன்யுவில் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி கூட்டம் நடத்தியுள்ளனர்.

அப்போது, பிரிவினைவாதிகள் சிலர், 'இந்தியா நூறு துண்டுகளாக உடையும்' என்று கோஷம் எழுப்பினர். இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டவர் கொண்டாடப்பட வேண்டிய நபரா? ஜேஎன்யு மாணவி என்ற முறையில் இதற்காக நான் பெரிதும் வருத்தப்படுகிறேன்” என்று மேலும் கூறினார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ