Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹெலிகாப்டர் இறங்க பத்தாயிரம் லிட்டர் தண்ணீர் வீணடிப்பு: கொந்தளிக்கும் மக்கள்!

மும்பை: மாநில மக்கள்  கடுமையான தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் போது அமைச்சரின் ஹெலிகாப்டர் வருகைக்கு பத்தாயிரம் லிட்டர் தண்ணீரை வீணடித்த விவகாரம் மகராஷ்டிரா மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  இது குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தின் வேளாண் மற்றும் வருவாய்த் துறை அமைச்சராக இருப்பவர் ஏக்நாத் கட்சே. இவர் தண்ணீர் பஞ்சம் நிலவி வரும் லாத்தூர் மாவட்டத்திற்கு ஹெலிகாப்டரில் சென்றார். அவர் வருகைக்காக அப்பகுதியில் தற்காலிக ஹெலிபேட் அமைக்கும் பணி நடைபெற்றது. அதற்காக சுமார் 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தரையில் கொட்டி வீணடிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஹெலிகாப்டருக்கு பதிலாக பெல்குண்டுவிலிருந்து கார் மூலம் சென்றிருந்தால் வெறும் 40 நிமிடங்களிலேயே லாத்தூரை அடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மாநிலம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வரும் சூழலில், இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அரசியல் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.இது மாநில மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடுமையான தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் லாத்தூர் மாவட்டத்திற்கு,  ரயில் மூலம் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close