Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு லட்சம் ரூபாய் பயிர் சேதத்துக்கு 81 ரூபாய் இழப்பீடு- அலட்சிய அரசு... கண்ணீரில் விவசாயி

மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நஷ்ட ஈடாக 81 ரூபாயை,  பாதிக்கப்பட்ட விவசாயிக்கு சத்தீஸ்கர் மாநில அரசு வழங்கியிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூர் அருகே சுர்குஜா கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்ராம். சமீபத்தில் பெய்த மழையால் இவருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமானது. ஒரு லட்சம் ரூபாய் அளவில் சேதம் அடைந்த பயிர்களுக்கு நஷ்ட ஈடு கேட்டு அரசுக்கு விண்ணப்பித்திருந்தார் ஜெய்ராம்.

இந்தநிலையில், ஜெய்ராமுக்கு பயிர் சேதமாக 81 ரூபாய்க்கான காசோலையை சத்தீஸ்கர் அரசு அனுப்பி வைத்துள்ளது. இந்த காசோலையை பார்த்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார் ஜெய்ராம்.

"இந்த 81 ரூபாயை வைத்து வாங்கிய கடனை அடைப்பதா அல்லது விஷம் வாங்கி தற்கொலை செய்து கொள்ள இந்த தொகையை அனுப்பியிருக்கிறார்களா எனத் தெரியவில்லை" என்று வேதனை தெரிவித்துள்ளார் ஜெய்ராம்.

சேதம் அடைந்த பயிர்களுக்கு மாநில அரசு 81 ரூபாய் இழப்பீடு வழங்கியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close