Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகத்தில் ஜெ. மீண்டும் ஆட்சி அமைப்பார்..! -கர்நாடகாவிலிருந்து ஒரு குரல்

பெங்களூர்: தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை பிடிப்பார் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து கர்நாடக முன்னாள் முதல்வரும், அம்மாநில பா.ஜ.க. தலைவருமான எடியூரப்பா, ஒரு நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், ''தமிழகம் மற்றும் கேரளாவில் பா.ஜ.க.வை வளர்க்க பாடுபட்டு வருகிறோம். இந்த இரண்டு மாநிலங்களிலும் வருகின்ற சட்டப் பேரவைத் தேர்தலில் கணிசமான வாக்குகளை பா.ஜ.க. பெறும். கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவுவதால் தமிழகத்தில் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வது கடினம். அதனால், கர்நாடக பா.ஜ.க. தொண்டர்களை தமிழக பிரசாரத்திற்கு அனுப்பி வைக்க உள்ளேன்

நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி அலை வீசியபோதும், தமிழகத்தில் பா.ஜ.க.வால் வெற்றி பெற முடியவில்லை. இதற்கு காரணம், முதல்வர் ஜெயலலிதாவின் செல்வாக்குதான். ஜெயலலிதா, பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் தமிழக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி உள்ளார். அதனால், ஜெயலலிதா மீண்டும் தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியை பிடிப்பார்.

மேலும், தமிழர்களிடம் எனக்கு பிடித்ததே, அவர்களிடமுள்ள கடின உழைப்புதான். தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்து வரும் கட்சி. அங்கு கணிசமாக வாக்குகளை பெற முயலுவோம். ஒரு இடத்திலாவது பா.ஜ.க. வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ