Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெல்லியில் சுழலவிருக்கிறது உலகின் மிகப்பெரிய ராட்டை!

புதுடெல்லி: 4 டன் எடையில் மரத்தினால் செய்யப்பட்ட உலகின் பிரம்மாண்டமான ராட்டை ஒன்று டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் நிறுவப்பட உள்ளது.

அகமதாபாத்தில் உள்ள காதி மற்றும் கிராமங்கள் ஆணைக்குழுவானது, மகாத்மா காந்தி உபயோகப்படுத்திய நூல் ராட்டையை பிரபலப்படுத்தும் விதமாக, தினமும் இரண்டரை லட்சத்திற்கும் மேலானவர்கள் வந்து செல்லும் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் ராட்டை ஒன்றை நிறுவ உத்தேசித்தது.

இதற்காக, காந்தி நினைவிடமான சபர்மதி ஆசிரமம் அருகே உள்ள பர்யோக் சமிதி எனும் நிறுவனத்திடம், உலகின் பிரம்மாண்ட ராட்டையை தயாரித்து தர ஆர்டர் கொடுத்தது. அதன்படி அந்த நிறுவனம், உயர் ரக தேக்கு மரம் கொண்டு 4 டன் எடையில், 26 தச்சர்களின் 40 நாள் கடின உழைப்பில் உருவாகியுள்ளது.

உலகின் பிரம்மாண்டமான ராட்டையான இது, 50 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்து உழைக்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ராட்டையானது அகமதாபாத்தில் உள்ள காதி கிராம பவனில் இருந்து தற்போது டெல்லிக்கு அனுப்ப தயாராக உள்ளது.

இந்தியாவின் அகிம்சைக்கான குறியீடாக உலக நாடுகள் அறிந்து கொள்ளும் வண்ணமும், காந்தியின் பெருமையையும் இந்தியாவின் அமைதி தன்மையையும் வெளிநாட்டவருக்கு விளக்கும் வகையில் இந்த பிரம்மாண்ட ராட்டை விரைவில் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ