Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காப்பகக் குழந்தைகளுக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய பெண்கள்: தெலுங்கானா அதிர்ச்சி

ஹைதராபாத்: தெலுங்கானாவில் உள்ள அரசுக் காப்பகத்தில் பெண் குழந்தைகளை சூடு வைத்துக் கொடுமைப்படுத்தும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைராலகியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு  பல்வேறு தரப்பினரும், குழந்தைகள் நல ஆர்வலர்களும் கடும் கண்டனத்தை  தெரிவித்துள்ளனர்.

ஹைதராபாத் நகரிலிருந்து 150 கி.மீ.தொலைவில் உள்ள கரிமாநகரில் இயங்கிவரும் அரசுக் காப்பகத்தில் பணிபுரியும் பெண்கள்,  அங்குள்ள குழந்தைகளை சூடு வைத்துக் கொடுமைப்படுத்துவதாக புகார் வந்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்று அதிகாரிகள் நடத்திய விசாரணையில், " அப்படி சம்பவம் எதுவும் நடக்கவில்லை, நாங்கள் உணவு சாப்பிட குழந்தைகளிடம் வலியுறுத்தினோம்"  என்று பணியாளர் பெண்கள் மறுத்துள்ளனர். ஆனால், அங்கு வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராவை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அந்தக் கேமிராவில், குழந்தைகளின் கைகளில் சூடு வைக்கப்பட்டு துன்புறுத்தும் காட்சிகள் பதிவாகியுள்ளதைக் கண்டுபிடித்தனர் .இதனையடுத்து அவர்கள் மீது சட்ட ரீதியான  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ