Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில், மொத்தம் 62 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள 7 தொகுதிகள் உள்பட மொத்தம் 62 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த 62 தொகுதிகளில், 34 பெண்கள் உள்பட 418 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். 65,79,331 பெண் வாக்காளர்கள் உள்பட 1.37 கோடி வாக்காளர்களைக் கொண்ட இந்த தொகுதிகளில் பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக 16,641 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில், 3,401 குக்கிராமங்கள் பதற்றம் நிறைந்தவையாக தேர்தல் ஆணையத்தால் அடையாளம் காண்டுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் அமைச்சர்கள் ஷாஷி பஞ்சா மற்றும் சதான் பாண்டே, பா.ஜ.க. தேசிய செயலாளர் ராகுல் சின்ஹா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 முறை எம்எல்ஏ-வாக இருந்த முகமது ஷோபர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. அனிசூர் ரஹ்மான் மற்றும் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி நஸ்ருல் இஸ்லாம் ஆகிய பிரபலங்கள் இன்று நடைபெறும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

பாதுகாப்பு பணியில் மாநில போலீசார் 25,000 பேருடன் துணை ராணுவத்தினர் 75,000 பேர் மற்றும் 700 கம்பெனி மத்திய படையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ