Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உத்தரகாண்ட்டில் ஜனாதிபதி ஆட்சி ரத்து: பரபரப்பு திருப்பம்!

புதுடெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி ஆட்சியை ரத்துச் செய்து அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இது மத்தியில் ஆளும் பா.ஜ.க.விற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 9 பேர், முதல்வர் ஹரீஷ் ராவத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அதனைத் தொடர்ந்து அவர்கள் பா.ஜ.கவுக்கு ஆதரவு தெரிவித்ததால், பெரும்பான்மையை  இழந்த ஹரீஸ் ராவத் அரசை நீக்க வேண்டும் என பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரையும், ஜனாதிபதியையும் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இதனால் உத்தரகாண்ட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.

இதனையடுத்து பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனதால் கடந்த மாதம் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து, உத்தரகாண்ட் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நடத்திய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஜனாதிபதி ஆட்சியை ரத்துச் செய்து இன்று  உத்தரவிட்டது.

இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிகிறது.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close