Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டாரா பாஜக அமைச்சர்? (சர்ச்சை வீீடியோ)

மத்திய பிரதேசம் மாநிலத்தில், பெண்ணிடம் உள்துறை அமைச்சர் பாபுலால் கவுர் தகாத முறையில் நடந்துக் கொண்டதாக  சர்ச்சைக்குரிய வீடியோ  ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சராக இருக்கும் பாபுலால் கவுர்(85), நேற்று போபால் அருகே உள்ள பர்கெதா நாது என்ற இடத்தில், கொடி அசைத்து பேருந்து போக்குவரத்தை தொடங்கி வைத்தார். அப்போது, பேருந்தில் ஏறும் ஒரு பெண்ணின் பின் புறத்தில் அமைச்சர் பாபுலால் கையால் தட்டுவது போன்ற வீடியோ காட்சி, சமூக ஊடகங்களிலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



இது குறித்து அமைச்சர் பாபுலால் கவுரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அந்த காட்சி உண்மையானது அல்ல என்றும், பேருந்தில் சீக்கிரம் ஏறுமாறு பாஜனதா பெண் தொண்டர்களை தான் கேட்டுக் கொண்டதாகவும், இதுதான் நடந்தது என்றும் அவர் பதில் அளித்தார்.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பரவி வருவதால் அமைச்சர் பாபுலால் கவுர் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ