Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

புதுச்சேரி: புதுச்சேரியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது.

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து தி.மு.க போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் தி.மு.க.வுக்கு 9 இடங்கள் ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில், இந்த 9 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை தி.மு.க தலைமை இன்று (23-ம் தேதி) வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

மங்களம் - சண்.குமரவேல்
முதலியார்பேட்டை - எஸ்.சுரேஷ்
காரைக்கால் (தெற்கு) - ஏ.எம்.எச்.நாஜிம்
நிரவி- திரு- பட்டினம் - ஏ.கீதா ஆனந்தன்
முத்தியால்பேட்டை - எஸ்.பி.சிவக்குமார்

தட்டாஞ்சாவடி - என்.கலியபெருமாள்
உருளையன்பேட்டை - இரா.சிவா
உப்பளம் - வி.அனிபால் கென்னடி
மண்ணாடிப்பட்டு - ஏ.கிருஷ்ணன் (எ) குமார்

-ஜெ.முருகன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ