Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜய் மல்லையா பாஸ்போர்ட் முடக்கம்; இந்தியா கொண்டு வரவும் நடவடிக்கை!

புதுடெல்லி: பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்கியுள்ளது.

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தவில்லை. இதையடுத்து, கடன் வழங்கிய வங்கிகள் இணைந்து, உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தன. அதில், விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக அவரது பாஸ்போர்ட்டை பறிக்க வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்தபோது, கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டார் என சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், விஜய் மல்லையா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதைத் தொடர்ந்து, விஜய் மல்லையாவின் பாஸ்போட்டை முடக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு, அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை ஏற்று விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்கியுள்ளது. மேலும், அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ