Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் ஓட்டுரிமை பறிப்பு: மத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

பாட்னா: 2 குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்களின் ஓட்டுரிமையை பறிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சிறு தொழில் துறை அமைச்சராக இருப்பவர் கிரிராஜ் சிங். இவர் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ''மக்கள் தொகையை கட்டுப்படுத்த இந்தோனேஷியா, மலேசியா போன்ற நாடுகளில் கடுமையான சட்டங்கள் உள்ளன.

தற்போது, இந்தியாவிலும் மக்கள் தொகை பெருகி வருகிறது. இது நாட்டின் வளர்ச்சிக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, இந்தியாவிலும், 2 குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்களின் ஓட்டுரிமையை பறிக்க சட்டம் கொண்டு வர வேண்டும்'' என்றார்.

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இவர் ஏற்கனவே, பிரதமர் மோடியை ஏற்காதவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ