Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹேமமாலினுக்கு ரூ.70 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ.1.75 லட்சத்துக்கு வழங்கிய மகாராஷ்டிரா அரசு!

மும்பை: நாட்டியப்பள்ளி அமைப்பதற்காக ரூ.70 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை, பா.ஜ.க எம்.பி.யும், நடிகையுமான ஹேமமாலினிக்கு ரூ.1.75 லட்சத்துக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கியுள்ளது.

பிரபல நடிகையும், பா.ஜ.க எம்.பி.யுமான ஹேமமாலினி ஒரு நாட்டிய கலைஞரும்கூட. மேலும், இவர் 'நாட்டிய விகார் கலகேந்திரா' என்ற அறக்கட்டளையும் நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளை மூலம் மும்பையில் நடனப்பள்ளி ஒன்றை அமைக்க அவர் முடிவு செய்தார். இதற்காக நிலம் கேட்டு மகாராஷ்டிரா அரசிடம் அவர் விண்ணப்பம் செய்தார். இதற்காக கடந்த 1997-ம் ஆண்டு ரூ.10 லட்சமும் முன்பணமாக செலுத்தியிருந்தார்.

சுமார் 20 ஆண்டுக்கு பிறகு, மும்பை மேற்கு அந்தேரி அருகேயுள்ள ஆசிவாரா பகுதியில் 2 ஆயிரம் சதுர மீட்டர் நிலம் ஹேமமாலினிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலம் எவ்வளவு தொகைக்கு வழங்கப்பட்டது என சமூக ஆர்வலர் அனில் கல்காலி என்பவர் ஆர்.டி.ஐ.யிடம் கேட்டிருந்தார்.

அதற்கு அளிக்கப்பட்ட பதிலில், ''ஒரு சதுர மீட்டர் ரூ.87.50 என்ற அடிப்படையில் 2 ஆயிரம் சதுர மீட்டர் இடம் ரூ.1.75 லட்சத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 1976-ம் ஆண்டின் மதிப்பின்படி அந்த இடத்திற்கு சதுர மீட்டருக்கு ரூ.350 விலை. கலையை வளர்ப்பதற்காக அறக்கட்டளைக்கு நிலம் ஒதுக்கும்போது, 25 சதவீத அரசு மதிப்பீட்டில் வழங்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதன் அடிப்படையில் ஒரு சதுர மீட்டர் ரூ.87.50க்கு வழங்கப்பட்டுள்ளது'' எனக் கூறப்பட்டுள்ளது.

''இந்த நிலத்துக்காக ஹேமமாலினி ரூ.10 லட்சம் முன்பணம் செலுத்தியிருக்கிறார். நிலத்தின் மதிப்பு ரூ.1.75 லட்சம் போக மீதி தொகையான 8.75 லட்சம் அரசிடம் இருந்து உத்தரவு வந்தவுடன் திருப்பி கொடுக்கப்படும்'' என மும்பை புறநகர் கலெக்டர் சேகர் சேனே கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ