Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜயதாரணிக்கு எதிர்ப்பு: விளவங்கோடு காங்கிரசார் டெல்லியில் உண்ணாவிரதம்!

புதுடெல்லி: விளவங்கோடு வேட்பாளராக விஜயதாரணியை அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த தொகுதி காங்கிரசார் டெல்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

அடுத்த மாதம் (மே) 16-ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து, தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, வேட்பாளர்கள் அறிவிப்பு வெளியானதிலிருந்து அ.தி.மு.க., தி.மு.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி உறுப்பினர்கள், தங்கள் பகுதி வேட்பாளர்களை மாற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் விளவங்கோடு தொகுதிக்கு விஜயதாரணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். இவருக்கும் தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விஜயதாரணியை மாற்றக்கோரி விளவங்கோடு தொகுதி காங்கிரசார் இன்று (24-ம் தேதி) டெல்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விஜயதாரணி கடந்த 5 ஆண்டுகளாக தொகுதி பக்கமே வரவில்லை எனவும் அவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ