Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவில் புற்றுநோய்க்கு தினமும் 50 குழந்தைகள் பலி!

புதுடெல்லி: இந்தியாவில் புற்றுநோய்க்கு தினமும் 50 குழந்தைகள் பலியாகி வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

டொரண்டோ பல்கலைக்கழகம், மும்பை டாடா நினைவு மையம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள், சர்வதேச அளவில் பரவும் நோய்கள் மற்றும் அதன் தன்மைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டன. இந்த ஆய்வு இந்தியாவில் 1 கோடி 40 லட்சம் பேரிடம் மேற்கொள்ளப்பட்டது. இதில், இந்தியர்களுக்கு அதிகளவில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், புற்று நோய் பாதிக்கப்பட்ட 10 லட்சம் குழந்தைகளில் 37 சதவீதம் பேர், அதாவது தினமும் 50 குழந்தைகள் உயிரிழக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவலும் கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் பிறந்த ஒரு மாத குழந்தை உள்பட 14 வயது வரையிலானவர்கள்.

மேலும், வளர்ந்த நாடுகளில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் முறையான சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் குணமடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியா போன்ற நடுத்தர வருமானம் ஈட்டக்கூடிய நாடுகளில் குறைந்த அளவிலான மருத்துவ சிகிச்சையே இருப்பதால், குழந்தைகள் அதிக அளவில் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே நிலை நீடித்தால், 2025-ம் ஆண்டில் புற்று நோய்க்கு பலியாகும் குழந்தைகளின் எண்ணிக்கை 5 மடங்குக்கும் மேல் அதிகமாகும் என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ