Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மயூர் காமத்: வற்றிய குளத்தில் சுரந்த கருணை! #WhereIsMyGreenWorld

ந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டு கொண்டிருக் கிறது. கொளுத்தும் வெயிலில் மக்களாகிய​ நாமே தத்தளிக்கும் போது விலங்குகள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்களின் நிலைமையை சிந்தித்து பார்த்தாலே பரிதாபம்​தான்​ வருகிறது.

மும்பையை சார்ந்த மயூர் காமத்​ என்பவர், ​ தனியொருவனாக எடுத்த முயற்சியால் வெயில் கொடுமையால் பரிதாபமாக சாக இருந்த நூற்றுக்கணக்கான மீன்கள் மற்றும் ஆமைகள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன.

இவர் வசித்து வந்த பகுதியில் இருக்கும் ஒரு பழமையான கோவிலில் இருந்த குளம்​,​ அதீத வெயில் ​காரணமாக வறண்டு​விட்டது​. வறண்டு வந்த அந்த குளத்தின் அடியில் இருந்த சேற்றில் மீன்களும் ஆமைகளும் தத்தளித்து கொண்டிருப்பதை அறிந்த மயூர்​,​ கோவில் நிர்வாகிகளிடம்  பேசியிருக்கிறார்.
 
இத்தனை வருடங்களில் இந்த வருடம்தான் அந்த குளம் வற்றிப் போயிருக்கிறது. உடனே அந்த குளத்தில் வாழும் நீர்வாழ் உயிரினங்கள் அனைத்தையும் காப்பாற்ற வேண்டும் என்கிற முனைப்புடன் முயற்சியில் ​ஈடுபட்டார்.​ 

முதல் நாளே 1000 மீன்கள் மற்றும் 80  ஆமைகளை​ காப்பாற்றினார். அதில் ​பெரிய மீன்கள்​ 50, அரிய​​வகை​ ​நீர்வாழ் உயிரினங்கள் 41.​ இவையெல்லாம்​ காட்சியகங்களில் மட்டுமே காணப்படும்​ அரிய​வகை உயிரினங்கள்.​

வலைகளை பயன்படுத்தி மீன்களையும், கைகளால் ஆமைகளையும் காப்பாற்றியுள்ளார். குளத்தில் இருந்த வண்டல் மண்ணும் வற்றி போக​,​ எஞ்சியிருந்த மீன்களை காப்பாற்றுவதில் மிகுந்த சிரமம் ​ஏற்பட்டது. இவர் தனியாக மீன்களை காப்பாற்றி வருவதை பார்த்து இவரோடு, சில தன்னார்வலர்கள், மீனவர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகளும் சேர்ந்து கொண்டதால் வேலை மும்முரமாக நடக்கத் தொடங்கியது.
 
 
மொத்தமாக 1000 சிறு மீன்கள், 50 பெரிய மீன்கள், 73​ ​இந்திய ஆமைகள் மற்றும் 51 அரிய வகை நீர்வாழ் ஆமைகள் குளத்திலிருந்து​ ​காப்பாற்றப்பட்டுள்ளன. காப்பாற்றிய உயிரினங்கள், பாதுகாப்பான இடங்களில் விடப்பட்டுவிட்டன. சில அரியவகை நீர்வாழ் ஆமைகளை மட்டும் வேறு இடத்தில் விடக் கூடாது என சட்ட​ங்கள்​ இருப்பதால்​, ​மழை பெய்து நீர் வந்தவுடன் ​ மறுபடியும் இதே குளத்தில்​விட்டுவிட முடிவெடுத்துள் ளனர். அதுவரை அந்த அரியவகை கடல் ஆமைகள் தன்னார்வலர்களின் கண்காணிப்பில் பாதுகாக்கப்படும். 

இதுபோல வறண்டு கொண்டிருக்கும் ​மற்ற குளங்களில் வாழும் நீர்வாழ் உயிரினங்களையும் காப்பாற்ற தன்னார்வலர் அணி ஒன்றையும் திரட்டி வருகிறார் மயூர். 

தொடரட்டும் இவரது​ மகத்தான சேவை​ !​

- கோ. இராகவிஜயா
(மாணவப் பத்திரிகையாளர்)

 


 

 

MUST READ