Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவிலே அதிக மாசடைந்த நகரம் எது தெரியுமா? #WhereIsMyGreenWorld

ரு வருடத்தில் உலகில் நடக்கும் உயிரிழப்புகளில் 1,26,00,000 உயிரிழப்புகளுக்கு காரணம் யார் என்று கேட்டால், அதற்கு பதிலாய் வருவது மாசுதான். சுற்றுச்சூழல் மாசு, தொழிற்சாலைக்​​ழிவுகள், காற்று, நீர் என அனைத்தையும் விட்டு வைக்காமல் பாதிப்பை ஏற்படுத்துகிறது இந்த சுற்றுச்சூழல் மாசு.

டெல்லியில் ஏற்கெனவே காற்று மாசு ப
ரவலாகி
 விட்டது. இந்தியாவில் ஓடும் ஒவ்வொரு ஆற்றிலும் ஏதாவது ஒரு தொழிற்சாலையின் கழிவு நீர், 
நொடிக்கு நொடி கலந்து கொண்டே இருக்கிறது. இமயமலையில்​
  பனிப்பாறைகளின் ​ உருகும் வேகம் அதிகரித்துள்ளது. இந்திய பெருங்கடல் நீர் மட்டம், அடிக்கடி சுனாமி போன்ற பேரழிவுகளை கண்முன்னே நிறுத்துகிறது. உலகில் நடக்கும் உயிரிழப்புகளில் இந்த சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் மட்டும் 23 சதவிகிதம் பேர் உயிரிழக்கின்றனர்.
 
அதாவது எண்ணிக்கையில் கூறினால் ஒரு கோடியே 26 லட்சம் பேர். இதில் 80 லட்சம் பேருக்கு இதய நோய், 
​புற்றுநோய்
 
​போன்ற
 நோய்களால் பாதிக்கப்பட்டு​ இற
க்கின்றனர்
. இதில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 17 லட்சம் பேர் பாதி
த்துள்ள​னர். அதே போல் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவையெல்லாம் உலக
ம் முழுவதும் பாதிக்கப்பட்டோருக்கான​  புள்ளி விவரங்கள். 

 இந்தியா மற்றும் தெற்காசிய பகுதிகளில்தான் உலகிலேயே அதிகமாக சுற்றுச்சூழல் மாசு
​அதிகரித்து,​ உயிரிழப்புகள் 
​அதிகமாக ​
ஏற்படுகிறது​. இதன்​  எண்ணிக்கை 38 லட்ச
ம்
. 2014ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவலின்படி
​,​ டெல்லிதான் இந்தியாவிலேயே அதிகமாக மாசடைந்த நகரம் என்ற பெயரை வாங்கியுள்ளது.

இத்தனை உயிரிழப்புகளுக்கும் காரணமாக​ மனிதனின் நாகரிக மாற்றம், சுற்றுச்சூழலை கெடுத்து 
​வளர்ச்சி காண்பது, வாழ்வியல் மாற்றம், அதிக மக்கள் தொகை ​
​போன்றவற்றை அடுக்கி கொண்டே போகலாம். உலகில் போர், இயற்கை சீரழிவுகளால் ஏற்படும் அழிவுகளின்
​ எண்ணிக்கையும்​, 
சுற்றுச்சூழல் மாசால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும்  சமமாகிறது. உலகம் வெப்பமயமாவது, ஓசோன் படலம் ​ பாதிப்பு
,​
ஆறுகளில் கோலா நிறுவனங்க
ளில் ​
நீர் உறிஞ்சுவது வரை அனைத்துமே சுற்றுச்சூழலை கெடுக்கும் விஷயம்தான். மனிதன் செய்கிற ஒவ்வொரு பாதிப்புக்கும் அதற்கான கூலியை மனிதனே தேடிக் கொள்கிறான்.
 
சென்னையில் வரலாறு காணாத மழைக்கும், சுட்டெரித்து கொண்டிருக்கும் வெயிலுக்கும் ஏதோ ஒரு வகையில் நாமும் காரணமாகி இருக்கிறோம். இதன் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு நேரடி தொடர்பு இல்லை என்றாலும்,
​​
கேயாஸ் தியரியில் நாமும் இதற்கு காரணமாகிறோம். இதனை முழுமையாக மாற்ற பல யுகங்கள் ஆகும். 
​இதுவே நாம் விழித்துக் கொண்டால் இந்த பேரழிவுகளை தடுக்க முடியும்.
 


இதுவரை வெட்டி சாய்த்த மரங்களை ஈடுகட்ட,  புதிய மரக்கன்றுகளை லட்சக் கணக்கில் மாதந்தோறும் நட தொடங்க வேண்டும். வளர்ச்சி பாதைக்கு சென்றாலும் இயற்கையை பாதிக்காத வளர்ச்சியை தேந்தெடுக்க வேண்டும்.

வறண்டு போன  நீ​ர் நிலைகளை கெடுக்காமல்,  அதை முறையாக​ பாதுகாத்து அழிவின் வேகத்தை குறைக்க முற்படுவோம்.

முடிந்தவரை நம் சொத்தாக இருக்கும் நீர் நிலைகளை அசுத்தப்படுத்தாமல் பேணிக் காப்போம். இயற்கையோடு ஒன்றி வாழ்வோம். வளர்ச்சி பாதைக்கு சென்றாலும் இயற்கையோடு இணைந்து செல்வோம்.
 
​- ஶ்ரீராம்​

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close