Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வேகத்தடைக்குப் பதிலாக 3டி படங்கள்: நிதின் கட்கரி யோசனைக்கு வரவேற்பு!

 

புதுடெல்லி: சாலைகளில் விபத்துக்களை தடுக்க வேகத்தடைக்குப் பதிலாக 3டி படங்களை வரையும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ஃபேஸ்புக் தளத்தில், ''நாம் அநாவசியமான வேகத்தடைகளுக்கு பதிலாக அதனைப் போன்று 3டி படங்களை சாலையில் தத்ரூபமாக வரைந்து வைக்க முயற்சித்து வருகிறோம்'' எனக் கூறியுள்ளார்.

நிதின் கட்கரியின் இந்த யோசனை சுமார் 14 ஆண்டுகளாக அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் நடைமுறையில் இருக்கிறது என்றாலும், மத்திய அரசு தற்போதுதான் இந்த திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

மேலும், நிதின் கட்கரியின் இந்த யோசனை, சமூக வலைதளங்களிலும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

''நெடுஞ்சாலைகள், எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலைகள் போன்றவற்றில் இதுபோன்ற 3டி படங்களை வரைந்து விட்டால், வேகத்தடைகள் அமைக்க வேண்டி இருக்காது எனவும், வேகமாக செல்லும் வாகனங்கள் தூரத்தில் இருந்தே இதை பார்க்க முடிவதால், வேகத்தடையால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க முடியும்" எனவும் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 5 லட்சத்திற்கும் அதிகமான சாலை விபத்துக்கள் நடக்கிறது. இதில், 1.5 லட்சம் பேர்  உயிரிழக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ