Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்!

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் என்.ஆர்.காங்கிரசின் சார்பில் முதல் கட்டமாக 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான ரங்கசாமி இன்று (27-ம் தேதி) வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:

1. இந்திரா நகர் - முதல்வர் ரங்கசாமி
2. கதிர்காமம் - என்.எஸ்.ஜே.ஜெயபால்
3. அரியாங்குப்பம் - சபாபதி
4. மண்ணாடிப்பட்டு - டி.பி.ஆர்.செல்வம்
5. மங்கலம் - சுகுமாரன்

6. முதலியார்பேட்டை - பாலன்
7. முத்தியால்பேட்டை - பிரகாஷ்குமார்
8. உழவர்கரை - பன்னீர்செல்வம்
9. வில்லியனூர் - தேனீ. ஜெயக்குமார்
10. உப்பளம் - புஸ்ஸி. ஆனந்து

11. உருளையன்பேட்டை - நேரு (எ) குப்புசாமி
12. தட்டாஞ்சாவடி - அசோக் ஆனந்து
13. ராஜ்பவன் - அனிபால் நேரு
14. மாஹி - ரகுமான்
15. பாகூர் - தியாகராஜன்

16. ஏனாம் - பைரவசாமி
17. காரைக்கால் வடக்கு - பி.ஆர்.என். திருமுருகன்
18. காரைக்கால் தெற்கு - சுரேஷ்
19. திருநள்ளாறு - பி.ஆர்.சிவா
20. நிரவி - உதயகுமார்
21. நெடுங்காடு - பிரியங்கா

இந்த பட்டியலை வெளியிட்டு முதல்வர் ரங்கசாமி பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், ''நெட்டப்பாக்கம், ஏம்பலம், திருபுவனை, காலாப்பட்டு, ஊசுடு, லாஸ்பேட்டை, மணவெளி, காமராஜர் நகர், நெல்லித்தோப்பு உள்ளிட்ட ஒன்பது தொகுதிகளுக்கான இரண்டாம் கட்டப் பட்டியல் நாளை (28-ம் தேதி) இரவுக்குள் வெளியிடப்படும்'' என்றார்.

இதைத்தொடர்ந்து, என்.ஆர்.காங்கிரசுக்கு வாக்களிப்பது என்பது தற்கொலைக்கு சமம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா விமர்சித்திருக்கிறாரே? என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, “யாருக்கு வாக்களிக்க வேண்டும் என புதுச்சேரி மக்களுக்கு தெரியும். கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களுக்கு ஆற்றியுள்ள பணியினால் மீண்டும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் தனித்து போட்டியிடுகிறோம்” என்றார்.

-ஜெ.முருகன்

படம்: அ.குருஸ் தனம்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ