Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

17 வருடங்கள்... 3,000 கடிதங்கள்... வீர மரணமடைந்த வீரர்கள் குடும்பத்தினருக்கு இப்படியும் ஓர் ஆறுதல்!

ந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வீர மரணம் அடைந்த தியாகிகளின் குடும்பத்தாருக்கு, கடிதத்தின் மூலம் தனது நன்றிகளை உரிதாக்கி, நம்பிக்கையும் ஆறுதலும் தந்து வருகிறார் 37 வயதான ஜிதேந்திரா. சூரத்தில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் காவலாளியாக வேலை பார்க்கும் ஜிதேந்திரா,  இதுவரை இப்படி 3000 கடிதங்கள் எழுதியுள்ளார்.

' கார்கில் போர் நடந்ததிலிருந்தே நான் இவ்வாறு கடிதங்கள் எழுதி வருகிறேன். இருப்பதிலேயே ராணுவ வீரர்களின் சேவைதான் மகத்தானது. நாட்டிற்காக தங்கள் இன்னுயிர் நீத்த தியாகிகளின் குடும்பத்தினர்,  எத்தனை வருடங்கள் ஆனாலும் சோகம் மறையாமல் இருளிலேயே வாழ்கின்றனர். அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் தந்து உறுதுணையாக இருக்க வேண்டியது இந்திய பிரஜைகளாகிய நம் ஒவ்வொருவருடைய கடமை' என்கிறார் ஜிதேந்திரா.

" என்னைப் போன்ற எளியவர்களின் வாழ்வை காக்க உயிர் நீத்த தியாகியை பெற்ற பெருமைக்குரியவர்கள் நீங்கள்... வருந்தாதீர்கள்"  என மகன்களை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கு கடிதம் மூலம்,  தன் அளவில்லா மரியாதையையும் அன்பையும் வெளிப்படுத்தி வருகிறார்.

இவ்வாறு கடிதங்கள் கிடைக்கபெறுகின்ற ராணுவ வீரர்களின் உறவினர்கள்,  தங்களை நினைவு கூர்ந்து நினைத்து பார்க்க மனிதர்கள் இருக்கிறார்கள் என நிச்சயம் மகிழ்ச்சிக் கொள்வர் என்பதில் சந்தேகமில்லை.

செய்தி தாள்கள், நூல்நிலையங்கள் என பல இடங்களில் அலைந்து திரிந்து,  நாட்டுக்காக உயிர் நீத்த வீர்களின் முகவரியை வாங்கி வந்து,  இவ்வாறு கடிதம் எழுதுகிறார் ஜிதேந்திரா. இன்று ஜிதேந்திராவிடம் உயிர் நீத்த 20,000 ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் பெயர் மற்றும் முகவரி இருக்கின்றது. 13 வருடங்களாக காவலாளியாக வேலை பார்த்து வரும் ஜிதேந்திரா,  தன் சொந்த செலவில்தான் இதை செய்து வருகிறார்.

" ஒரு முறை என் கடிதத்தை பார்த்து விட்டு,  ராணுவ வீரரின் தந்தை என்னை சந்திக்க விருப்பம் தெரிவித்தார். ஆனால் என்னால் சந்திக்க முடியாமல் போய்விட்டது. இன்று வரை அவருக்கு அவ்வபோது போன் செய்து பேசுவேன். இங்கு குஜாரத்தில் அவரின் மகனின் தியாகத்தை நினைத்துப்பார்க்க ஒருவன் இருக்கிறேன் என்பதை தெரியப்படுத்துவதற்காகவே இதை செய்கிறேன்" என்று கூறும் ஜிதேந்திராவின் தந்தையும் ஒரு ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும், 2003 ல் காஷ்மீரில் சண்டையிட்டு இறந்துபோன ராணுவ வீரரின் பெயரான ஹர்தீப் சிங்கையே தன் மகனுக்கு சூட்டியுள்ளார் ஜிதேந்திரா. " இது போல நான் கடிதம் எழுதுவதை பைத்தியக்காரத்தனம் என்று என் குடும்பமும் நண்பர்களும் கூறுகின்றனர். என்ன ஆனாலும் சரி.. நான் இருக்கும்வரை இவ்வாறு கடிதங்கள் எழுதிக்கொண்டுதான் இருப்பேன்" என்று கூறும் ஜிதேந்திராவுக்கு நம் மரியாதைகள்.

எந்த வித பிரதிபலனையும் எதிர்பாராமல் இவ்வாறும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

-கோ. இராகவிஜயா
( மாணவப் பத்திரிகையாளர்)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ