Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

​தண்ணீருக்கா வந்தது இந்த பஞ்சம்...?! #WhereIsMyGreenWorld

 
 
​​வேகமாக அதிகரித்து வரும் தண்ணீர்த் தட்டுப்பாடு, மக்களை எந்த அளவுக்கு பாதித்து வருகிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு கர்நாடக மாநிலம்,  பெலஹவிக்கு அருகில் உள்ள தரிஹல் என்னும் கிராமத்தில், மக்கள் தண்ணீருக்காகப்படும் அவதியைச் சொல்லலாம்.

6,000 பேர் வசிக்கும் இந்தக் கிராமம்,  இதுவரை இப்படி ஒரு தண்ணீர் பஞ்சத்தை சந்தித்ததே இல்லை. கிராமத்தில் தண்ணீர்க் குழாய்கள் இல்லாததால்,  அங்குள்ள மக்கள் அனைவரும் இதுவரை கிராமத்தில் இருந்த நான்கு கிணறுகளையே நம்பி வாழ்ந்தனர். அனல் கொளுத்தும் வெயிலில் முதல்முறையாக, நான்கு கிணறுகளுமே வற்றிப்போய்விட்டன. நிலைமையைச் சீராக்க அதிகாரிகள் முன்வந்து, டேங்கர் லாரிகளில் தண்ணீர் சப்ளை செய்தும், பற்றாக்குறை தீரவில்லை. லாரிகளில் கொண்டுவரும் தண்ணீர் 15 நிமிடத்தில் தீர்ந்து விடுவதோடு, தண்ணீருக்காக மக்கள் சண்டையிடுவது வாடிக்கையாகிவிட்டது. அலங்காரத்துக்காக கையில் அணியும் வளையல்களையே இங்குள்ள பெண்கள் வெறுக்கின்றனர். அதற்கு ஒரே காரணம் தண்ணீர் பிடிக்கும்போது நடக்கும் சண்டையில் வளையல்கள் உடைந்துவிடுவதுதான்
​.
 
 

திறந்த வெளியில் மலம் கழிப்பதை ஒழித்து அனைவர் வீட்டிலும் கழிப்பறை கட்டி சமீபத்தில்தான் இந்தக் கிராமம் கழிப்பறைக் கலாசாரத்திற்கு மாறியது. தற்போது தண்ணீர்ப் பஞ்சத்தால் கழிப்பறைகளைப் பயன்படுத்துவது கூடுதல் சிரமமாக உள்ளது. நிலைமையைச் சமாளிக்கக் கூடுதல் லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து, வற்றிய கிணறுகளில் ஊற்றிவிட்டு சென்றனர் அதிகாரிகள். ஆனால் அதுவும் போதவில்லை. ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குக் கீழ், வாளிகளில் தண்ணீர் இரைக்க முடியாததால் பெண்கள் வேறு வழியின்றி கிணறுகளுக்குள் கயிற்றினைப் பிடித்து இறங்கி கிணற்றின் அடிப்பகுதிகளில் ஊறும் தண்ணீரை சிறு பாத்திரங்களில் நிரப்பி எடுத்து வந்து அத்தியாவசியத் தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

அடுத்தமுறை குழாயைத் திறந்துவிட்டு மூடாமலேயே பல் தேய்க்கும் போதும், பக்கெட் நிறைந்து தண்ணீர் வழிந்து ஓடிக்கொண்டிருக்கும் குழாயை மூட மறக்கும்போதும் தயவு செய்து இந்தப் பெண்கள்படும் வேதனையை சற்று நினைத்துப் பாருங்கள்.

நீரின்றி அமையாது உலகு.

- கோ. இராகவிஜயா

(மாணவப் பத்திரிகையாளர்)

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close