Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பச்சை நிறமே... பச்சை நிறமே.... சிக்னலில் நிற்போர் கவனத்திற்கு! #WhereIsMyGreenWorld

ந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் வெயில் உக்கிரமாக நாட்டையே வாட்டிவரும் நிலையில், மக்கள் வெளியில் சென்று தினசரி வேலைகள் செய்வதற்கே சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மதிய நேரங்களில் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பயணம் செய்வது மிகச் சிரமமமான வேலையாக மாறிவிட்டது. 44 டிகிரி செல்ஷியஸ் வெயில் வாட்டிவரும் நாக்பூர், இந்தியாவின் வெப்பமான நகரங்களில் ஒன்று.

இந்த நிலையில் நாக்பூரில் உள்ள அதிகாரிகள் சிலர்,  வெயிலில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் மக்களுக்கு உதவும் பொருட்டு டிராஃபிக் சிக்னலுக்கு அருகில் பச்சை கேன்வாஸ் கூரைகளை நிறுவி உள்ளனர். இதனால் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வோர்,  டிராஃபிக் சிக்னலில் காத்திருக்கும்போது வெயிலில் இருந்து சிறிது நேரம் ஒதுங்கி ஓய்வெடுத்துக்கொள்ள முடிகிறது.



மேலும் இந்த கேன்வாஸ் கூரை நிறுவப்பட்டதில் இருந்து யாரும் டிராஃபிக் சிக்னலை மீறி வண்டி ஒட்டிச் செல்வதில்லை என்றும் கூறுகின்றனர் அதிகாரிகள். மக்களும் ஓரிரு நிமிடங்கள் சற்று நிம்மதியாய் இந்தக் கூரைக்குக் கீழ் நின்றும்  சிக்னல் பச்சைக்கு மாறும்வரை பொறுத்திருந்து செல்கின்றனராம். வெயிலில் இருந்து தப்பிக்க இது ஒரு தற்காலிகமான தீர்வுதான் என்றாலும் மக்கள் மத்தியில் இந்த யோசனை வரவேற்பைப் பெற்றுள்ளது.

வாட்டும் வெயிலில் இருந்து தப்பிக்க, நாக்பூர் அதிகாரிகளின் இந்த யோசனையை நம் ஊர்களில்கூட பின்பற்றலாமே.

- கோ.ராகவிஜயா

(மாணவப் பத்திரிகையாளர்)

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close