Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெ.பிரசாரத்தில் தொண்டர்கள் மரணம் எதிரொலி: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடு!

புதுடெல்லி: அதிமுக பிரசாரக் கூட்டத்தில் தொண்டர்கள் 5 பேர் கடும் வெயில் காரணமாக மயங்கிவிழுந்து பலியான சம்பவத்தால் அரசியல் கட்சிகள் அளித்த தொடர் புகார்களை விசாரித்த தேர்தல் ஆணையம் தமிழகத்தில் பிரசாரக் கூட்டம் நடத்துவதற்கு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பங்கேற்ற பிரசாரக் கூட்டங்களில்   தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றவர்களில் 5 பேர்  உயிரிழந்தனர். தமிழகம் முழுக்க கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த மரணங்கள் பொது மக்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தியை அதிமுக மீது உண்டாக்கியது.   

இதையடுத்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற அதிமுக தேர்தல் பொதுக் கூட்டங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், வெப்பம் காரணமாக பொதுமக்கள் உயிரிழந்ததாக திமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டது. சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடுமையான வெயில் நேரத்தில் ஜெயலலிதா பிரசாரக் கூட்டம் நடத்தக் கூடாது என்று குரல்கள் எழுப்பப்பட்டன. இந்நிலையில் புகார்களைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும்  பொதுவான கட்டுப்பாடுகளை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் ஊடகப் பிரிவு இயக்குநர் தீரேந்திர ஓஜா நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

" தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் சிலர் கடுமையான வெப்பம் காரணமாக உயிரிழந்ததாக மனுக்கள் தேர்தல் ஆணையத்துக்கு வந்துள்ளன. அவற்றைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், அவர்களின் ஏஜெண்ட்டுகள், பிரசாரங்களில் ஈடுபடுவோர் உள்ளிட்டோர், வெப்பம் கடுமையாக நிலவும் சூழலில் பொதுக் கூட்டங்கள் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும். பொதுக் கூட்டம் நடத்தப்படும் இடங்களில் பந்தல்கள், குடிநீர், முதலுதவி வசதிகள் உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்த வேண்டும். பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய சூழல்களில் கூட்டங்களை நடத்தாமல் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்த்தப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close