Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இனி தாஜ்மஹால் காதலின் சின்னம் இல்லை....ஏன்? #WhereIsMyGreenWorld

லக காதலர்களின் சின்னமான தாஜ்மஹால், இனி காதலுக்கான சின்னமல்ல; இந்திய சுற்றுப்புறச்சூழல் சீர்கேட்டின் சின்னம். ஆம் அந்தளவுக்கு நாள்தோறும் மாசடைந்து வருகிறது ஷாஜகானின் கனவு மாளிகை.
காதலின் மகத்துவத்தை சொல்லும் தாஜ்மஹாலின் இன்னொரு சிறப்பு,  அதன் பளிங்குக்கல்.

கண்ணைக்கவரும் இந்த பளிங்கு கல், இப்போது மஞ்சள் நிறமாகிக் கொண்டுவருகிறது என கவலை கொள்கின்றனர் மக்களும் சூழலியலாளர்களும்.யுனெஸ்கோவினால் உலக பாரம்பர்ய சின்னங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ள தாஜ்மஹாலை, வருடந்தோறும் மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகள் உலகெங்கிலுமிருந்து வந்து பார்வையிடுகின்றனர். தற்போ
து இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றான இதன் பொலிவு குறைந்து போயிருப்பது கவலை தரும் விஷயமாகியிருக்கிறது .

தாஜ்மஹால் மாசடையத் துவங்கி பல ஆண்டுகள் ஆகின்றன. தொழில் நகரமான ஆக்ராவில் காற்று மாசடைவதே இதற்கு காரணம் என்கின்ற சுற்றுச்சூழலியலாளர்கள், அதற்கு காரணமாக தொழிற்சாலையையும், அது உருவாக்கும்  அமில மழையையும் குறிப்பிடுகின்றனர்.

அமில மழை என அழைக்கப்படும் அமில வீழ்படிவை அமெரிக்க,  ஐரோப்பிய நாடுகளின் முகத்தை சிதைக்கும் தொழுநோய் எனக் குறிப்பிடுவர். நேரடியாக காணமுடியாத அமில மழையை, அது காடுகள் மற்றும் இயற்கை வளங்கள் மீது விட்டுச்செல்லும் அடையாளங்களில் காணமுடியும்.

நிலக்கரி மற்றும் எண்ணெய் போன்ற புகை வடிவ தொல்லியல் பொருட்களை எரிப்பதால் வெளிவரும் கந்தக டைஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு போன்றவை அமில வீழ்படிவை உருவாக்குகின்றன. மூன்றில் 2 பங்கு கந்தக டை ஆக்ஸைடு,  நிலக்கரியை எரிப்பதன்மூலம் கிடைக்கிறது. இந்த வாயு நீண்ட நேரம் நிலைத்து நிற்கும் தன்மையற்றதால்,  வெகுவிரைவில் காற்றிலுள்ள ஈரப்பதத்துடன் வினைபுரிந்து கந்தக அமிலத்தை உருவாக்குகிறது. தொழிற்சாலை கழிவு மற்றும் அதிலிலிருந்து வெளியேறும் வாயுக்கள் சமீபகாலமாக இப்படி அமிலமழையை பொழிந்துவருகிறது. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கொடிய நச்சு வாயுக்கள், காற்றுடன் வினை புரிந்து அமில மழையை பொழிகின்றன.

சமீபத்தில் அம்மாநிலத்தில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை பெருத்துப்போயிருப்பதும் இதற்கு ஒரு காரணம். தாஜ்மஹால் சுற்றுச்சூழல் மாசினால் மஞ்சள் நிறமாக மாறுவதை தடுக்கும் நடவடிக்கையாக,  அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாட்டுச் சாணத்தினை எரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை காரணமாக தாஜ்மஹால் மீது கார்பன் துணிக்கைகள் படிவது குறையும் என நம்பப்படுகின்றது.

தாஜ்மஹாலைச் சுற்றிலும் நிலவும் காற்றின் தன்மை, சுற்றுச்சூழல், பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை தொடர்ந்து கண்காணித்து வருவதாக எந்த அரசு வந்தாலும் சொல்லிக்கொண்டிருக்கிறது.

தாஜ்மஹாலின் அழகை அரசு மீட்டெடுக்கவேண்டும்.

- எஸ்.கிருபாகரன்
படங்கள்: ப.சரவண குமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ