Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அறிவியல் எக்ஸ்பிரஸ்... இயற்கை உலகிற்குள் ஒரு இனிய பயணம்! #WhereIsMyGreenWorld

சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே, குறிப்பாக மாணவர்களிடையே ஏற்படுத்துவதற்காக நம் இந்திய ரயில்வே சிறப்பு ரயில் ஒன்றை நாடு முழுவதும் சுற்றி வருமாறு இயக்கி வருகிறது. 16 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில், 8 பெட்டிகள் சுற்றுப்புறச்சூழல் குறித்து விளக்கம் கொண்டவை. 

பள்ளி மாணவர்களை மனதில் கொண்டு இந்த ரயில் புறப்பட்டாலும்,  பொதுமக்களுக்கும் சூழலியல் பற்றிய செய்திகள் செல்ல வேண்டும் என்று முனைப்புடன் வலம் வந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பான  விவாதங்களும் மாணவர்களுக்கிடையே நிகழ்த்தப்படுகின்றன.

2015-ம் வருடம் அக்டோபர் மாதம் 15-ம் தேதி புறப்பட்ட இந்த ரயில்,  20 மாநிலங்களில் 64 பகுதிகளைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. 20,000 கிலோமீட்டர் என்பது இதன் இலக்கு.

இந்த அறிவியல் ரயில் கண்காட்சி சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை மிக ஆணித்தரமாக மக்கள் மனதில் பதிய வைப்பதுடன் அவர்களின் கருத்துகளையும் கேட்டுப் பதிவு செய்கிறது. இயற்கை மற்றும் சுற்றுச்சூழலியல் பற்றிய பெரும் விழிப்புணர்வை இந்த ரயிலின் கூவென்ற சத்தம் உலகுக்கு அறிவிக்கும் என்பது உறுதி.
 

- கணேஷ குமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ