Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய குழந்தைகளை அமெரிக்க தம்பதி தத்தெடுக்க நீதிமன்றம் அனுமதி!

 

பெற்றோரால் கைவிடப்பட்ட 2 குழந்தைகளை, அமெரிக்க நாட்டு தம்பதி தத்தெடுக்க மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தானே,  உல்லாஸ்நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனக்கு பிறந்த மகனையும், மகளையும் கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பரில், தனியாக தவிக்க விட்டு விட்டு சென்றுவிட்டார். இதையடுத்து, அந்த சிறுவன், சிறுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குழந்தைகள் நல கமிட்டியிடம் ஒப்படைத்தனர். அவர்களை தத்தெடுக்க இந்திய வம்சாவளியை சேர்ந்த கனடா நாட்டு தம்பதி முன்வந்தனர்.

இதைத்தொடர்ந்து, முறைப்படி அனுமதி அளிக்குமாறு மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, அந்த குழந்தைகளை தன்னிடமே ஒப்படைக்குமாறு அவற்றின் தாயார் உயர் நீதிமன்றத்தில், மற்றொரு மனு தாக்கல் செய்தார். இதனை பரிசீலித்த நீதிபதி, குழந்தைகளை அவற்றின் தாயாரிடமே ஒப்படைக்குமாறு குழந்தைகள் நல கமிட்டிக்கு உத்தரவு பிறப்பித்தது.

இருந்தபோதிலும், குழந்தைகளை திரும்ப பெற தாயார் முன்வரவில்லை. இந்த நிலையில், அதே குழந்தைகளை தத்தெடுக்க அமெரிக்காவை சேர்ந்த மற்றொரு தம்பதியினர் விருப்பம் தெரிவித்தனர். இதேபோல், மீண்டும் உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கவுதம் பட்டேல், அந்த குழந்தைகளின் தாயாரை கடுமையாக கண்டித்தார். அப்போது மிகவும் உணர்வுப்பூர்வமாக காணப்பட்ட அவர், ‘‘இந்த சின்னஞ்சிறு குழந்தைகள், இவ்வளவு சிறிய வயதில் சந்தித்த துயரங்களை கற்பனை செய்து பார்ப்பது கூட கடினமானது. அவர்கள் பிறப்பின்போதே பெற்றோரால் கைவிடப்படவில்லை. சற்று விவரம் தெரிந்த பின்னரே பெற்றோர் அவர்களை தவிக்க விட்டிருக்கின்றனர்’’ என்று கூறினார்.

மேலும், அந்த குழந்தைகளை அமெரிக்க தம்பதி தத்தெடுக்க ஒப்புதல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ