Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெ.பிரசாரக் கூட்டத்தில் உயிர்ப்பலிகள்: அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

புதுடெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டு பேசிய பிரசாரக் கூட்டங்களில்,  5 பேர் வெயில் கொடுமை தாங்காமல் பலியான விவகாரத்தில், தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வருகிற 16ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளைத்  தேர்தல் ஆணையம் விரிவாகச் செய்துள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சித் தலைவர்களும், சுட்டெரிக்கும்  கோடை வெயில் நேரத்திலும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்துத் தரப்பு மக்களும் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ள சூழலில், அரசியல் கட்சிகள் பகல் நேரத்தில் செய்யும் பிரசாரம் பெரும் அதிருப்தியை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் நடந்த ஜெயலலிதா பங்கேற்ற இரண்டு பிரசாரக் கூட்டங்களில், கடும் வெயில் காரணமாக 5 பேர் அடுத்தடுத்து மயங்கிவிழுந்து உயிரிழந்தனர். இது கட்சிகள் கடந்து அனைத்து தரப்பினர் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அனைத்து எதிர்க்கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் புகார் கூறி இருந்தன.  சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பிரசாரக் கூட்டம் சென்றால் சாக வேண்டுமா என்றும், இதில் தேர்தல் ஆணையம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், உச்சிவெயில் நேரத்தில் ஜெயலலிதா பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.     

இந்நிலையில் டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் எச்.எல்.தத்துவை பாமக வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.வேலு சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார்.

அதில், " அ,தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பங்கேற்கும் தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்துகொள்பவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததால் 5 உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளது. விருத்தாசலத்தில் நடந்த கூட்டத்தில் 2 பேரும், சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 3 பேரும் உயிர் இழந்தனர். இந்த கூட்டங்களில் கலந்துகொள்ள ஒவ்வொருவருக்கும் தலா ரூ.3 ஆயிரம் மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒரு நாள் கூலியும் தரப்படுகிறது. மக்கள் கடும் வெயிலில் திறந்தவெளியில் உட்கார வைக்கப்படுவதும், அவர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் தரப்படாததும் மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும்.

தேசிய மனித உரிமை ஆணையம் உடனடியாக இதில் தலையிட்டு மனித உயிர்கள் பலியாவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது." என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் அரசியல் கட்சிகள். கடும் வெயிலில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடத்துவது பற்றி பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு. தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் 2 வாரங்களில் பதில் அளிக்குமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொண்டு உள்ளது.

பகலில் சுட்டெரிக்கும் வெயிலில் நடத்தப்படும் பொது கூட்டங்களில், மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. எனவே  இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோர் பதில் அளிக்குமாறு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close