Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தாவூத் - நடிகர் கோவிந்தா இடையிலான தொடர்பு..! சுயசரிதையில் ரகசியத்தை வெளியிட்ட உ.பி. ஆளுநர்!

 

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம்மை தனது நண்பர்களாக்கிக் கொண்டு அவரது ஆதரவாளர்களின் வாக்குகளை நடிகர் கோவிந்தா தனக்கு சாதகமாக பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்றார் என்று உத்தரபிரதேச ஆளுநர் ராம்நாயக், தனது சுயசரிதை புத்தகத்தில் எழுதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த ராம்நாயக், தற்போது உத்தரப்பிரதேச மாநில ஆளுநராக உள்ளார். இவர், மராட்டிய மொழியில் தனது சுயசரிதையை புத்தகமாக எழுதியுள்ளார். அதில், 1999ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை மத்திய அமைச்சராகவும், 3 முறை எம்.பி.யாகவும் இருந்தேன். மும்பைக்காக பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டுள்ளேன். அப்படிப்பட்ட நான் 2004ம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்தேன். அதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அப்போது என்னை எதிர்த்து நடிகர் கோவிந்தா காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார்.

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் கட்டுமான தொழில் அதிபர் ஹில்டன் தாகூர் ஆகியோரை தனது நண்பர்களாக்கிக் கொண்டு அவரது ஆதரவாளர்களின் வாக்குகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வெற்றி பெற்றார்.  தேர்தல் சமயத்தில் ஒரு உள்ளூர் தொலைக்காட்சி கோவிந்தா நடித்த படங்களையும் அவரது பிரசாரத்தை மட்டுமே திரும்ப திரும்ப ஒளிபரப்பியது. அந்த தொலைக்காட்சி அதிபர் நீர் பூங்கா அமைக்கும் திட்டத்தை மீனவர்கள் எதிர்த்ததால் நானும் எதிர்த்தேன். இதனால் தேர்தலில் எனக்கு எதிராக தனது டி.வி.யில் கோவிந்தா பிரசாரத்தை ஒளிபரப்பினார்" என்று கூறியுள்ளார்.

இது குறித்து நடிகர் கோவிந்தாவிடம் கேட்டபோது, "ராம் நாயக் வயதில் மூத்தவர் அவரிடம் இதை நான் எதிர்பார்க்கவில்லை. தயவு செய்து எனது பெயரை களங்கப்படுத்த வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ