Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மருத்துவ பொது நுழைவு தேர்வுக்கு மாநில அரசுகள் எதிர்ப்பு: நாளை இறுதி முடிவு!

புதுடெல்லி: மருத்துவ பொது நுழைவு தேர்வுக்கு பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக நாளை இறுதி முடிவு எடுக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டே பொது நுழைவுத் தேர்வு நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை விசாரித்த நீதிபதிகள் கடந்த மாதம் 28-ம் தேதி தீர்ப்பளித்தனர். அதில், பொது நுழைவுத்தேர்வு நடத்த உத்தரவிட்டதோடு, மே 1-ம் தேதி முதல் கட்ட தேர்வும், ஜூலை 24-ம் தேதி இரண்டாம் கட்ட தேர்வும் நடத்த வேண்டும் எனவும், ஆகஸ்ட் 17-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். அதன்படி, கடந்த 1-ம் தேதி முதல்கட்ட தேர்வு நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து பல்வேறு மாநில அரசுகள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு இன்று (5-ம் தேதி) விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், பொது நுழைவுத் தேர்வுக்கு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? என கேள்வி எழுப்பியதோடு, நாளை இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் கூறினர்.

மேலும், நாளை மொத்தம் 20 நிமிடங்கள் வாதம் நடைபெறும் எனவும், ஒவ்வொரு மாநில அரசுக்கும் தனது வாதத்தை முன்வைக்க ஒரு நிமிடம் வழங்கப்படும் எனவும், மாநில அரசுகள் கருத்துக்களின் படி நாளை இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் நீதிபதிகள் கூறினர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close