Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வு முறையில் மாணவர் சேர்க்கை: மத்திய அரசு தகவல்!

புதுடெல்லி: தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வு முறையில் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என உச்சநீதிமன்றத்தில், மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டே பொது நுழைவுத் தேர்வு நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை விசாரித்த நீதிபதிகள் கடந்த மாதம் 28-ம் தேதி தீர்ப்பளித்தனர். அதில், பொது நுழைவுத்தேர்வு நடத்த உத்தரவிட்டதோடு, மே 1-ம் தேதி முதல் கட்ட தேர்வும், ஜூலை 24-ம் தேதி இரண்டாம் கட்ட தேர்வும் நடத்த வேண்டும் எனவும், ஆகஸ்ட் 17-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். அதன்படி, கடந்த 1-ம் தேதி முதல்கட்ட தேர்வு நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து பல்வேறு மாநில அரசுகள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு நேற்று (5-ம் தேதி) விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், பொது நுழைவுத் தேர்வுக்கு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? என கேள்வி எழுப்பியதோடு, நாளை இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் கூறினர்.

அதன்படி இன்று (6-ம் தேதி) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ கவுன்சில் தனது கருத்துக்களை முன் வைத்தது. அதில், ''தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வு முறையில் மாணவர் சேர்க்கை நடத்தலாம். ஆனால், பிற பிற மாநில அரசு கல்லூரிக்கு அந்தந்த மாநில அரசுகள் நடப்பாண்டு தேர்வு நடத்தலாம்.

தனியார் மருத்துவக் கல்லூரிகள் தேர்வு நடத்த அனுமதிக்கக் கூடாது. அனைத்து மாணவர்களையும் 2-ம் கட்ட மருத்துவ தேர்வுக்கு அனுமதிக்க முடியாது. மாநில அரசு கல்லூரி தவிர பிற கல்லூரி தேர்வை எதிர்கொள்ள வேண்டும்'' என கூறப்பட்டது.

இதைக்கேட்ட நீதிபதிகள், பொது நுழைவுத் தேர்வு வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close