Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காங்கிரஸ் காமெடி செய்கிறது..! -தமாஷ் நாயுடு

மும்பை: காங்கிரஸ் கட்சி எங்கள் மீது சுமத்துகின்ற குற்றச்சாட்டுகள் அனைத்தும் நகைப்புக்குரியவை என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்து உள்ளார்.

உத்தரகாண்ட் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி காங்கிரஸ் அரசை கவிழ்க்க மத்திய அரசு முயற்சிப்பதாக கூறி, நாடாளுமன்றம் முன் நேற்று காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, காங்கிரஸ் கட்சியின் போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார். அப்போது, ''காங்கிரஸ் கட்சி எங்கள் மீது சாட்டுகிற குற்றச்சாட்டுகள் அனைத்தும் நகைப்புக்குரியவை. இதற்கு அவர்களுக்கு தார்மீக உரிமை இல்லை.

பிரதமர் மோடி, குஜராத் முதலமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க காங்கிரஸ் முயற்சித்தது. ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே இதுபோன்ற போராட்டங்களில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டுவருகிறது" என்று குற்றஞ்சாட்டினார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ