Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அட... ரயில் என்ஜினிலேயே கழிப்பறை வந்தாச்சு..!

 

தொலை தூர ரயில் பயணங்களின்பொழுது கழிப்பறை வசதி இல்லாமல் இருந்தால் நாம் எவ்வளவு அவதிப்படுவோம். அந்த அவதியைதான் கடந்த 163 வருடங்களாக ரயில் வண்டியை இயக்கும் ஓட்டுநர்கள் அனுபவித்து வந்திருக்கின்றனர்.

ஒவ்வொரு முறையும் அரசிடம் அவர்கள் கழிப்பறைக்காக கோரிக்கை வைத்தபொழுதும் அரசு தெரிவித்த ஒரே பதில், ரயில் ஓட்டுநர்கள் தங்கள் வேலையை பாதியில் விட்டு கழிப்பறைக்குச் செல்வது ஆபத்தில் முடியலாம் என்பதே.

இன்று, அவர்கள் மகிழ்ச்சியுறும் வகையில், ரயில்வே அமைச்சகம், பயோ டாய்லெட் வசதி கொண்ட முதல் ரயில் எஞ்சினை அறிமுகம் செய்துள்ளது. ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இந்த திட்டத்தின் முதல் எஞ்சினை இன்று கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இந்த கழிப்பறைகளில் பல்வேறு சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது. ரயில் 0 கி.மீ. வேகத்தில் இருக்கும் பொழுது மட்டுமே இதன் கதவுகள் இயங்கும். வண்டி நகரத் தொடங்கி விட்டாலோ அல்லது நகர்ந்து கொண்டு இருக்கும் பொழுதோ இதை பயன்படுத்த இயலாது. அதே போல ஓட்டுநர் உள்ளே இருக்கும் பொழுது ரயிலின் பிரேக்குகள் இயக்கத்தில் இருக்கும். 2016-17 ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் இதை செயல்படுத்த அறிவிப்புகள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் பல்வேறு போக்குவரத்து துறையினருக்கு பல ஓய்வு விதிமுறைகள் இருக்கிறது. ஒரு பேருந்து ஓட்டுநர் 5 மணி நேரம் பேருந்தை இயக்கிய பிறகு இளைப்பாறலாம். டெல்லி மெட்ரோ ரயில் ஓட்டுநர்களுக்கு 3 மணி நேர பணிக்குப் பின் 40 நிமிட ஓய்வு உள்ளது. விமான ஓட்டுநர்களுக்கு தொலைவிற்கு ஏற்றது போல ஓய்வு உண்டு.

இதைப் பற்றி ரயில்வே உயரதிகாரி ஒருவர் கூறுகையில், " இது வரவேற்கத்தக்க விஷயம்தான் என்றாலும், வண்டி நின்ற பிறகு மட்டுமே பயன் படுத்த முடியும் என்பது இந்த திட்டத்தின் தேவையையே அழித்து விடுகிறது" என தெரிவித்தார்.

தொகுப்பு - பா.அபிரக்ஷன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close