Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராஜஸ்தான் பாடப்புத்தகத்தில் இருந்து நேரு பெயர் நீக்கம்!

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து நேரு உள்ளிட்ட காங்கிரசின் சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு நீக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் நேரு உள்பட அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் மற்றும் சரித்திரங்கள் இடம் பெற்றிருந்தது. மேலும், சுதந்திரத்திற்கு பின்பு அரசு அமைக்க ஜவஹர்லால் நேரு மற்றும் சர்தார் வல்லபாய் படேல் ஆகியோரின் பங்களிப்புகள் குறித்து விபரமாக இடம் பெற்று இருந்தது.

இந்நிலையில், தற்போது அம்மாநில பாடத்திட்டத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதில், மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், வீர் சர்வார்கர், பகவத் சிங், லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர் ஆகியோரின் வரலாறுகள் இடம் பெற்றுள்ளது. ஆனால், நேரு உள்ளிட்ட காங்கிரசின் சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. மேலும், இந்தியாவின் முதல் பிரதமர் யார்? என்பது குறித்தும் விவரங்கள் கொடுக்கப்படவில்லை.

இதுகுறித்து, அம்மாநில கல்வித்துறை அமைச்சர் வாசுதேவ் தேவ்னானி கூறுகையில், ''நான் இன்னும் அந்த புத்தகத்தை பார்க்கவில்லை. இனிமேல்தான், பார்க்க வேண்டும். தற்போது பாடத்திட்டங்கள் அனைத்தும் தன்னாட்சி அமைப்பால் உருவாக்கப்படுகிறது. எனவே, இதில் மாநில அரசோ, நானோ தலையிட முடியாது'' என்றார்.

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ