Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

3 மாடி கட்டடம் இடிந்து விழும் அதிர்ச்சி காட்சி! (வைரல் வீடியோ)

ஷியோகர்: பீகார் மாநிலத்தில் திடீரென 3 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சி தரும் அந்த சம்பவத்தின் வீடியோ காட்சி தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பீகார் மாநிலம் ஷியோகர் மாவட்டத்தில், நேற்று ஒரு 3 அடுக்கு மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் பலர் படுகாயம் அடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர், மீட்பு குழுவினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.



இந்த சம்பவம் குறித்து முழு விவரம் வெளியாகாத நிலையில், இதில் ஏற்பட்ட பலி எண்ணிக்கையும், படுகாயம் அடைந்தவர்கள் குறித்த தகவல்களும் வெளியாகவில்லை. இந்த கட்டடம் இடிந்து விழுந்ததை நேரில் பார்த்த ஒருவர், தன் செல்போனில் அதை அப்படியே படம் பிடித்துள்ளார். இந்த அதிர்ச்சிகர வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close