Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’போ மோனே மோடி!’ - ஆர்ப்பரிக்கும் கேரளா

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தை சோமாலியாவுடன் ஒப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து கேரள அரசு பரிசீலிப்பதாக முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்து உள்ளார்.

கேரள மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'கேரளாவில் பழங்குடி இன குழந்தைகளின் இறப்பு விகிதம், சோமாலியாவைவிட அதிகமாக உள்ளது' என்று கூறினார். பிரதமரின் இந்த கருத்து கேரள மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பிரதமருக்கு எதிராக பலர் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கொச்சியில் செய்தியாளர்களிடம் முதல்வர் உம்மன்சாண்டி கூறும்போது, ''நரேந்திர மோடி இந்த நாட்டின் பிரதமர். கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டதன் மூலம், கேரள மக்களை அவர் அவமதித்து விட்டார். நாங்கள் இந்த விவகாரத்தை முக்கிய பிரச்னையாக பார்க்கிறோம்.

மனிதவள பட்டியலில், பா.ஜ.க. ஆளும் குஜராத்தைவிட நாங்கள் தான் முன்னிலையில் இருக்கிறோம். ஆனால், ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையிலேயே மோடி இந்த தகவல்களை வெளியிட்டு உள்ளார். இது தவறு. பிரதமராக இருக்கும் மோடி இதுபோன்ற தகவல்களை கூறுமுன் அலுவலக ஆவணங்களை சோதித்து பார்த்திருக்க வேண்டும்.

மேலும், பிரதமர் மோடிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம். அத்துடன் இந்த பிரச்னையை தேர்தல் ஆணையத்திடம் கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பது குறித்தும் பரிசீலித்து வருகிறோம்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்