Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாக்.கில் சொகுசு வாழ்க்கை வாழும் தாவூத்: ஆதாரத்துடன் வீடியோ வெளியீடு!

புதுடெல்லி: நிழலுலக தாதா  தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக ஆதாரத்துடன் செய்தி வெளியாகியுள்ளது.

டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று,  தாவூத் இப்ராகிம் குறித்து ரகசிய புலனாய்வு மேற்கொண்டது. இதில், தாவூத் இருக்கும் இடம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அவை சேகரித்துள்ளது.

இது தொடர்பான வீடியோவை அந்த தொலைக்காட்சி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில், நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானின் கராச்சி நகரில்,  D 13, Block 4, Clifton என்ற முகவரியில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவரது வீட்டைச் சுற்றி ஆயுதங்களுடன் பாதுகாவலர்கள் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தாவூத் இப்ராகிம் அங்கு வாழ்ந்து வருவது அப்பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் தெரியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரே,  தாவூத் இப்ராகிம் இதே முகவரியில் வசித்து வருவதை ஆதாரத்துடன் கூறி, அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய அரசு பலமுறை வலியுறுத்தியும் பாகிஸ்தான், அதை செய்யவில்லை என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறுகையில், ''தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் அரசு, தாவூத் இப்ராகிமை இந்தியாவிடம் ஒப்படைக்கும்'' என்று நம்பிக்கை தெரிவித்தார்.

வீடியோ இங்கே...

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close