Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிளஸ் டூ தேர்வில் புதுச்சேரியில் முதல் மூன்று இடங்களை பிடித்த 5 மாணவர்கள்!

புதுச்சேரி: 2016 கல்வியாண்டின் புதுச்சேரி மாணவ, மாணவியர்களின் +2 பொதுத்தேர்வுகளுக்கான முடிவுகளை இன்று காலை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார். இதில், முதல் மூன்று இடங்களை 5 மாணவர்கள் பிடித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற +2 பொதுத்தேர்வில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 14,285 மாணவர்கள் தேர்வெழுதினர். அதில் 12,533 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி விகிதம் 87.74%. இது கடந்த ஆண்டின் தேர்ச்சி விகிதமான 88.15% விட 0.41% குறைந்திருக்கிறது. 34 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றிருக்கின்றன.

இந்த தேர்வில், முதல் இடத்தில் ஒரு மாணவரும், இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை தலா இரண்டு மாணவ, மாணவியர்களும் பிடித்திருக்கின்றனர். 1,185 மதிப்பெண்கள் (பிரெஞ்சு மொழி) வாங்கிய பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளி மாணவர் டி.மார்ட்டின் மாநில அளவில் முதல் இடம் பிடித்துள்ளார்.

1,183 மதிப்பெண்கள் பெற்று சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவி (சமஸ்கிருதம் மொழி) காயத்ரியும், காரைக்கால் நிர்மலா ராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி மீனா கதிஜாவும் (பிரெஞ்சு மொழி) இரண்டாம் இடங்களைப் பிடித்திருக்கின்றனர்.

அதேபோல், 1,182 மதிப்பெண்களைப் பெற்று அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி மாணவி பி.புவனேஸ்வரியும் (பிரெஞ்சு மொழி), செயிண்ட் பேட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி பி,அல்பர்டினாவும் (தமிழ் மொழி) மூன்றாம் மூன்றாம் இடங்களைப் பிடித்திருக்கின்றனர்.

அரசுப் பள்ளிகள்...

1,170 மதிப்பெண்கள் பெற்று திருவள்ளுவர் அரசு  பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி முதல் இடத்தையும், 1,166 மதிப்பெண்கள் எடுத்து அன்னை சிவகாமி மேல்நிலைப் பள்ளி மாணவி இரண்டாவது இடத்தையும், 1,156 மதிப்பெண்கள் எடுத்து வ.உ.சி. அரசு மேனிலைப்பள்ளி மாணவன் மோகன் மூன்றாம் இடத்தையும் பெற்றிருக்கிறார்கள்.

-ஜெ.முருகன்

படங்கள்:
அ.குரூஸ்தனம்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close