Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2002 கோத்ரா ரயில் எரிப்பு... 2016ல் சிக்கிய முக்கியக் குற்றவாளி!


2002ம் ஆண்டு நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி பரூக் பானாவை 14 ஆண்டுகளுக்கு பிறகு குஜராத்தில் தீவிரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

கடந்த 2002ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் இருந்து கரசேவகர்கள் சபர்மதி ரயில் மூலமாக வந்து கொண்டிருந்தபோது, அந்த பெட்டிக்கு கும்பல் ஒன்று தீ வைத்தது. இதில் 59 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, குஜராத்தில் நடந்த வன்முறையில் 1200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

சபர்மதி ரயிலுக்கு தீ வைப்பதற்கு முன் நகர கவுன்சிலராக இருந்த பரூக் பானா, தனது இல்லத்தில் 20 பேருடன் ஆலோசனை நடத்தியதாகவும், இந்த ஆலோசனையில் ரயில் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும் பரூக் பானா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த பரூக் பானா, இன்று குஜராத்தின் மத்திய பகுதியான நகா என்ற இடத்தில் வைத்து தீவிரவாத தடுப்பு காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ