Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சட்டசபையில் தி.மு.க.வின் குரல் வேகமாகவும், கம்பீரமாகவும் ஒலிக்கும்! -ஸ்டாலின் நம்பிக்கை

சென்னை: தமிழ்நாட்டு மக்களின் பிரச்னைகளுக்காக சட்டசபையில் எங்களது குரல் வேகமாகவும், கம்பீரமாகவும் ஒலிக்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் பிரசாரத்திற்கு செல்லும் முன் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதியில் நடைபெறும் தேர்தலை பாதிக்காது என்று தான் நினைக்கிறேன். ஏன் என்றால் முறையாக தேர்தல் நடைபெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

தமிழக சட்டப்பேரவையில் ஏற்கனவே 23 தி.மு.க. உறுப்பினர்கள் இருந்தோம். அப்போதும் சட்டமன்றத்தில் எங்களுடைய கடமையை ஆற்றினோம். தற்போது தி.மு.க.வுக்கு பெருவாரியான வெற்றி கிடைத்து அதிக பெரும்பான்மையான உறுப்பினர்கள் இருக்கின்றோம்.

வலிமை மிகுந்த எதிர்கட்சியாக தமிழக சட்டப்பேரவையில் அமர்ந்து ஜனநாயக முறைப்படி கடமை ஆற்றுவோம். இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி நிச்சயமாக தமிழ்நாட்டு மக்களின் பிரச்னைகளுக்காக சட்டசபையில் எங்களது குரல் வேகமாகவும், கம்பீரமாகவும் ஒலிக்கும்.

சாதிக் பாட்ஷா மரணத்தில் முறையான சி.பி.ஐ. விசாரணை வேண்டும். தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சிக்கு துணையாக செயல்பட்ட அதிகாரிகள் மீது சட்டப்படி நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ