Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேரள முதல்வராகிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பினராயி விஜயன்!

திருவனந்தபுரம்: கேரள மாநில முதல்வராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பினராயி விஜயன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

கேரள மாநில சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

தேர்தலில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி  தோல்வி அடைந்ததை தொடர்ந்து, முதல்வர் உம்மன் சாண்டி, தனது ராஜினாமா கடிதத்தை மாநில ஆளுநர் சதாசிவத்திடம் இன்று காலை அளித்தார்.

இந்நிலையில், இன்று காலை தேசியச் செயலர் பிரகாஷ் காரத் முன்னிலையில் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுவினர் கூடி ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கேரள சட்டப்பேரவைக்கு இடதுசாரி கூட்டணி சார்பில் பினராயி விஜயன் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

நாம் தான் முதல்வராக தேர்வு செய்யப்படுவோம் என்று எதிர்பார்த்து காத்திருந்த அச்சுதானந்தன், இந்த முடிவால் அதிருப்தி அடைந்து, பினராய் விஜயனை முதல்வராக தேர்வு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி மாநிலக் குழு கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

தர்மதம் தொகுதியில் இருந்து கேரள சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் பினராயி விஜயன். இவர், அமைச்சராகவும், கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close