Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மருத்துவ நுழைவுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்! -மத்திய அமைச்சர் உறுதி

புதுடெல்லி: மருத்துவ நுழைவுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா உறுதிபட தெரிவித்து உள்ளார்.

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு (NEET) நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி முதல்கட்ட தேர்வு முடிவுற்ற நிலையில், இரண்டாம் கட்ட தேர்வுகள் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பொது நுழைவுத் தேர்வு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. இதையடுத்து, பொது மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க இருப்பதாக செய்திகள் பரவியது.

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறும்போது, ''இரண்டாம் கட்ட தேசிய தகுதி நுழைவுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், சில மாநிலங்களில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்த பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் வகையில் அரசு விரைவில் முடிவு எடுக்கும்.

தேசிய தகுதி நுழைவுத் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வரும் என்ற செய்தியில் உண்மை இல்லை. இரண்டாம் கட்ட மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வு திட்டமிட்டபடி ஜூலை 24-ம் தேதி நடைபெறும்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ