Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ராக்கெட் வெற்றிகரமாக சோதனை!

ஸ்ரீஹரிகோட்டா: இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ராக்கெட்டான ஆர்.எல்.வி டிடி இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவி சோதனை செய்யப்பட்டது.

விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்திய பிறகு வெடித்துச் சிதறி கடலில் விழுந்து வீணாகி விடுவது வழக்கம். பலகோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் ராக்கெட்டுக்கள் இப்படி வீணாவதை தவிர்க்க அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, மறு பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கூடிய ராக்கெட்டுக்களை பயன்படுத்தி வருகிறது. பால்கன் 9 உள்ளிட்ட நாசாவின் ராக்கெட்டுக்கள் பத்திரமாக பூமிக்கு திரும்பி வரக் கூடியவை.

இந்நிலையில், இதேபோல் மறுபயன்பாட்டிற்கு ராக்கெட்டுக்களை கொண்டு வரும் சோதனையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இறங்கியுள்ளது. இது, இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) விஞ்ஞானிகளின் உழைப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

இதற்காக ஆர்.எல்.வி டிடி என்கிற ராக்கெட்டை தயாரித்துள்ள இஸ்ரோ, இன்று காலை அந்த ராக்கெட்டை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவாண் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது. இது இந்திய விண்வெளி ஆய்வு வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகும்.

அமெரிக்கா மட்டுமே பயன்படுத்தி வந்த ஆர்.எல்.வி. டி.டி. ராக்கெட்டை முதன்முறையாக இந்தியா சோதனை செய்துள்ளது. ரூ.95 கோடியில் மறுபயன்பாட்டு மாதிரி ராக்கெட்டை உருவாக்கி உள்ளனர் இஸ்ரோ விஞ்ஞானிகள். விண்ணில் செலுத்தப்பட்ட மறுபயன்பாட்டு ராக்கெட், 17 மீட்ட நீளமும், 1.75 டன் எடையும் கொண்டது. 70 கி.மீ. விண்ணில் சென்று மீண்டும் பூமிக்கு திரும்புகிறது ஆர்.எல்.வி. டி.டி. ராக்கெட்.

இது குறித்து இஸ்ரோ தலைவர் கிரண்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''ஆர்.எல்.வி டிடி ராக்கெட் தற்போது முதல்முறையாக தொழில்நுட்பரீதியாக சோதனை முறையில் ஏவப்படுகிறது. இது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட பிறகு, செயற்கைக்கோள்களுடன் செலுத்தப்படும்.

அமெரிக்கா மட்டுமே பயன்படுத்தி வந்த இந்த வகை ராக்கெட் முழுக்க முழுக்க இந்தியாவில் முதன் முறையாக இந்திய விஞ்ஞானிகளின் 5 வருட முயற்சியில் தயாரிக்கப்பட்டது. இது 70 கிலோ மீட்டர் தூரம் சென்று திரும்பும். இந்த ராக்கெட் பூமியை வந்தடைந்த பிறகு அதனுடைய ஆய்வு தொடர்ந்து நடைபெறும்" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close