Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு... புதுச்சேரி மாநிலத்தில் 4 மாணவிகள் முதலிடம்!

புதுச்சேரி: 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில், 498 மதிப்பெண்கள் பெற்று புதுச்சேரி மாநிலத்தில் 4 மாணவிகள் முதலிடம் பிடித்து உள்ளனர்.

2015-16 கல்வியாண்டில் புதுச்சேரி, காரைக்காலைச் சேர்ந்த 17,752 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அதில், 16,407 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி அடைந்து உள்ளனர். இந்த தேர்வில், புதுவை மாநில அளவில் 498 மதிப்பெண்கள் பெற்று அமலோற்பவம் மேனிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி எஸ்.ப்ரீத்தி (பிரெஞ்ச் மொழி), சுப்ரமணிய பாரதி மேனிலைப்பள்ளி மாணவி பி.கீர்த்தனா (தமிழ் மொழி), குளூனி மேநிலைப் பள்ளி மாணவிகள் ஜூடி மெக்டலைன் மற்றும் பி.வைஷ்ணவதேவி (பிரெஞ்ச் மொழி) ஆகிய நான்கு மாணவிகள் முதலிடம் பிடித்துள்ளனர்.

இரண்டாம் இடம்...

காரைக்கால் எஸ்.ஆர்.வி.எஸ். நேஷனல் மேனிலைப்பள்ளி மாணவி ரேஷ்மா, புதுச்சேரி ஆல்பா மேனிலைப்பள்ளி மாணவி ராஜலட்சுமி, அமலோற்பவம் மேனிலைப் பள்ளி மாணவிகள் வி.புவனா, ஸ்னேகா மாறன், மாணவர்கள் ஆர்.அரவிந்த், எ.சரண் தேவ், எஸ்.எம்.சூர்யா, பெத்தி செமினார் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்.அருன் கோகுல், எம்.மேரிசாமுவேல், ஸ்ரீ அன்னைராணி மேனிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி ஜீவராணி, சுப்ரமணிய பாரதி மேனிலைப்பள்ளியைச் சேர்ந்த டி.பாரதி, டி.சந்திரலேகா, எம்.ஹரிசா பேகம், எம்.சவிதா, சி.வினோத், குளூனி மேனிலைப் பள்ளியைச் சேர்ந்த கே.பாக்யஸ்ரீ, சாந்தா கிளாரா மேனிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் டி.அன்புமணி, எஸ்.சசி ஆகிய 18 மாணவ, மாணவிகள் 497 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.

மூன்றாம் இடம்...

ஆல்பா மேனிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி எஸ்.விஜயலட்சுமி, அமலோற்பவம் மேனிலைப் பள்ளியைச் சேர்ந்த டி.பிலிசைய பியூட்டி, ஆர்.இந்துஜா, எம்.சந்தியா, ஜி.சதீஷ்குமார், பெத்தி செமினார் மேனிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆர்.அகிலேஷ், சபரி வித்யாஷ்ரம் மேனிலைப்பள்ளி எஸ்.மது, ஸ்டேன்ஸ் ஃபோர்டு மேனிலைப்பள்ளி மாணவி எஸ்.சௌமியா, சுப்பிரமணிய பாரதி பள்ளி மாணவிகள் எஸ்.ரேணுகாதேவி, விஷாலினி, குளூனி மேனிலைப் பள்ளி மாணவிகள் கே.ஐஸ்வர்ய துர்கா, கே.எஸ்.கிருத்திகாதேவி, மற்றும் வசுதராணி 496 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.

அரசு பள்ளிகளில் முதல் மூன்று இடங்கள்...

இதேபோல் மதகடிப்பட்டு பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் ஆர்.கே.சந்துரு 493 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தையும், சவரிராயலு நாயகர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவி 484 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாம் இடத்தையும், காரைக்கால் முருகாத்தால் ஆட்சி அரசுப் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவி 483 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

புதுச்சேரி மற்றும் காரைக்காலின் மொத்தத் தேர்ச்சி விகிதம் 92.42%. இது, கடந்த ஆண்டைவிட 0.11% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

- ஜெ.முருகன்

படங்கள்: குரூஸ் தனம்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ