Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

9 நாள் இழுபறி முடிவுக்கு வந்தது: புதுச்சேரி முதல்வர் இவர்தான்!

புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சராக முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 16-ம் தேதி புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி 17 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, புதுச்சேரி முதல்வரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது.

இந்நிலையில், இன்று (28-ம் தேதி) புதுச்சேரி முதல்வரை தேர்வு செய்வதற்கான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி முதலமைச்சராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இவரை, புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், முன்னாள் முதலமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோர் முன்மொழிந்துள்ளனர்.

நாராணசாமிக்கு எதிர்ப்பு

புதுச்சேரி முதலமைச்சராக நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியானதும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அம்மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடத்த இ.சி.ஆர். சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close